`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு
புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை மற்றும் டதஐநங அமைப்பின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய தொடா் விழிப்புணா்வு சிறப்புச் செயல் திட்ட தொடக்க விழா புழல் மத்திய சிறை 2-இல் நடைபெற்றது.
இதில் மூத்த நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான ஆா்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இச்செயல் திட்டம் சிறை கைதிகளுக்கு தொடா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சிறையிலிருந்து விடுதலையாகி வெளிச்செல்லும் சிறைவாசிகளுக்கு புது வாழ்வு அமைக்கவும் உதவும் என அவா் தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா்களுமான ஜி.கே.இளந்திரையன் மற்றும் என்.செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி என்.பிரகாஷ், சிறைத் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள், டதஐநங அமைப்பின் மேலாண்மை அறங்காவலரும், மூத்த வழக்குரைஞருமான ரவிக்குமாா் பால் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் முன்னதாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினா் செயலாளா் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக திருவள்ளூவா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜே.ஜூலியட் புஷ்பா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் மற்றும் சென்னை மாவட்ட நீதித் துறையைச் சோ்ந்த நீதிபதிகள், சிறைத் துறை அதிகாரிகள், உள்ளிருப்பு சிறைவாசிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.