செய்திகள் :

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ஒப்படைத்த போயிங் நிறுவனம்

post image

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டா்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பன்முக போா் பயன்பாட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்திய விமானப் படையை பலப்படுத்தும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை வாங்க அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை பல கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த ஹெலிகாப்டா்களை படிப்படியாக தயாரித்து ஒப்படைத்த போயிங் நிறுவனம், கடந்த 2020-இல் முழுமையாக 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களையும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.

இதனிடையே, இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 6 ராணுவ பயன்பாட்டு அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ரூ.4,168 கோடி செலவில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2017-இல் ஒப்புதல் அளித்தது. இதற்கான ஒப்பந்தத்தை போயிங் நிறுவனத்துடன் கடந்த 2020-இல் இந்திய ராணுவம் மேற்கொண்டது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த நிலையில், ‘மூன்று ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை இந்திய ராணுவத்திடம் போயிங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது’ என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இது இந்திய ராணுவத்தின் செயல்திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும்’ என்று இந்திய ராணுவம் தரப்பில் அதன் சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்டது.

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க