செய்திகள் :

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

post image

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிருக்கிறார்.

'நலன் காக்கும் ஸ்டாலின்', 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மாற்றப்பட வேண்டுமென முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளது பற்றி பேசுகையில், "நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதைப் பற்றி நாம் சொல்ல முடியுமா... அவர்கள் மட்டும் எல்லாத் திட்டத்துக்கும் அம்மா, அம்மா எனப் பெயரிட்டனர். இப்போது எங்களைக் குறை கூறுகின்றனர்." என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

ஓ பன்னீர்செல்வம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "அவர்கள் (அதிமுக) திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் அவர்களிடம் செல்வார்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்துதான் திமுகவுக்கு ஆட்கள் வருகிறார்கள். ஓபிஎஸ் வந்துகொண்டிருக்கிறார், எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்." எனப் பேசினார்.

Duraimurugan
Duraimurugan

முன்னதாக ஓபிஎஸ், பிரேமலதா மு.க.ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணியில் கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என திமுக அமைச்சர் துரைமுருகனிடம் கேட்கப்பட்டபோது, "பின்னணியும் இல்லை முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். அவ்வளவுதான்" என அவரது பாணியில் பதிலளித்தார்.

முன்னாள் முதலமைச்சர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவரான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதல் அவர் எங்கே இணையப்போகிறார் என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் களத்தில் சுழலத்தொடங்கியிருக்கிறது.

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்தி... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி திமுக MLA-வைத் திட்டிய MP தங்கதமிழ்செல்வன்; மேடையில் கடும் வாக்குவாதம்; என்ன நடந்தது?

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.முகாமின் வரவேற்பு பேனரில் ஆண... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு'- கமல்ஹாசன் காட்டம்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்திருக்... மேலும் பார்க்க