'ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு'- கமல்ஹாசன் காட்டம்
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பி இருக்கிறார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்திருக்கிறோம். இப்போது உள்ளே இருந்து பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய கடமை, பெருமை புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு, தமிழ்நாடு அதுதான் என் பொறுப்பு.

அதற்காகவே சென்றிருக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ஆவணப்படுகொலைகள் குறித்த கேள்விக்கு, " சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு" என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார்.