உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில்,
பரத்பூரின் ஒரு கடை அருகே சாலையோரத்தில் மூவரின் சடலம் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர் அனிதா, அவரது 12 வயது மகன், மருமகன் சுபம் என அடையாளம் கணப்பட்டனர்.
கஞ்சோலி கிராமத்தில் உள்ள கடைக்கு வெளியே மூவரும் இறந்து கிடந்தனர். சடலங்களுக்கு அருகில் அடையாளம் தெரியாத பொடி அடங்கிய சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்றும், சிதறிக்கிடந்த பொருளின் தடயங்களும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாள்களாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அனிதா இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனுடன் கரௌலியில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி, பரத்பூருக்குச் செல்வதாக தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். அவரது கணவர் தேவேந்திரா தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்.
போலீஸார் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, பெண்ணின் சகோதரர் உடல்களை அடையாளம் கண்டுபிடித்தார். தற்கொலை உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம், மேலும் உடல்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பொடியின் தன்மை குறித்து ஆராயப்படுகிறது என்று அவர் கூறினார், ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.