செய்திகள் :

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா? சங்கல்பித்தால் தீர்வுவரும்!

post image

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்

உங்கள் ஜாதகத்தை வைத்து அதில் என்னென்ன தோஷங்கள் உள்ளன என்று கணித்துவிடலாம் என்கிறது ஜோதிடம். பல்வேறு தோஷங்களில் முதன்மையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழக்கையில் நிம்மதியே இருக்காது. எத்தனை முயன்றாலும் முன்னேற்றம் என்பதே வராது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியம், பதவி உயர்வு, சலுகைகள் என எதுவுமே கிடைக்காது. அவ்வளவு ஏன் திருமணம், மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் கூட உங்கள் வீட்டில் நடைபெறாமல் சிக்கலாகி நிற்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ம் இடத்தில் கெடுதல் தரும் கிரகங்கள் இருந்து, 6, 8, 12-ம் இடங்களில் நலம் தரும் கிரகங்கள் இருந்தாலும், 5, 9-ம் வீடுகளுக்கு அதிபதியாக அசுப கிரகங்கள் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் அவர்களுக்கு உள்ளதென ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 மற்றும் 9-ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதாக அறியலாம். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி பரிகாரம் பெற சில வழிகள் உண்டென ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் சிறப்பானது பிரம்மஹத்தி பரிகார ஹோமம்.

போரில் ராவணனை வென்ற ஸ்ரீராமபிரான், தெரிந்தோ தெரியாமலோ போரில் உயிரிழந்த மனக்கேதம் நீங்கவும் தன்னைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் ராமேஸ்வரத்தில் நீராடி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி பரிகார பூஜை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறே வரகுண பாண்டியனும் படுத்திருந்த ஒருவரை தெரியாமல் குதிரையில் செல்லும்போது மிதித்துக் கொன்றுவிட்டார். அந்த கொலைபாவம் நீங்க, பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூரில் பரிகார பூஜைகள் செய்தார் எனப்படுகிறது.

அதேபோல விக்கிரமச் சோழரின் பிரம்மஹத்தி தோஷத்தை கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் உள்ள ஸ்ரீசோளேஸ்வரர் தீர்த்தார் என்றும், அதற்காக அப்பெருமானுக்கு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்றும் வரலாறு கூறுகிறது.

கும்பகோணம், மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா பெயரிலேயே திப்பையாராஜபுரம் என்றாகி அதுவே திப்பிராஜபுரம் என்றானது என்கிறது வரலாறு.

brammahaththi homam

அக்னி ஹோத்ரிகளும் பெரும் ஞானிகளும் வாழ்ந்த இந்த ஊர் காஞ்சி மகாபெரியவரின் விருப்பமான ஊர் எனப்படுகிறது. இந்த ஊரில் 3000 பழைமையான ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயம் அமைந்துள்ளது. திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர்.

தற்போது முழுவதுமாக சிதிலமடைந்து திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும் இந்த ஆலயத்தை கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பிரம்மஹத்தி தோஷத்தால் தொழிலில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், கூடி வரும் திருமணம் தள்ளிப் போதல். எல்லா பணிகளும் பாதியில் நிற்றல். அடிக்கடி ஏமாந்து பணத்தை இழப்பது, சொந்தங்களால் ஏமாற்றப்படுவது என பல ஆண்டுகள் பரிதவித்து நிற்பவர்களுக்கு நிச்சயம் இந்த பிரம்மஹத்தி தோஷ ஹோமம் பலன் அளிக்கும். அதுவும் திப்பிராஜபுரம் என்னும் இந்த திருத்தலத்தில் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயத்தில் இந்த பரிகார ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்கள் என்பது உறுதி.

QR CODE FOR BRAMMAHATHTHI HOMAM

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை; ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்ட சாப்டூர் வனச்சரக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இ... மேலும் பார்க்க

``குன்றாண்டார் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு!'' - துரை வைகோ எம்.பி சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக பராமரிப்பில்லாமல் இருக்கும் குன்றாண்டார் கோயிலை புனரமைக்க ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித... மேலும் பார்க்க

சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பிரதோஷத்திற்குக் குவிந்த பக்தர்கள்; வனத்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விம... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: கடன்; நஷ்டம்; தோல்வி; தடை என அனைத்தையும் நீக்கி வெற்றி தரும் வழிபாடு

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. கடன்; நஷ்டம்; தோல்வி; சூழ்ச்சி; தடை என அனைத்தையும் நீக்கி வெ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை; மகிழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண... மேலும் பார்க்க