ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கவினை ஆணவப் படுகொலை செய்தார்.
இந்த விவகாரத்தில், சுர்ஜித் கைதுசெய்யபட்டதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரின் பெற்றோரும் கைதுசெய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்திய கவினின் பெற்றோர், நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து தனது மகனின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
அதேசமயம், எஃப்.ஐ.ஆரில் சுர்ஜித் மற்றும் அவரின் பெற்றோரின் பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் கிருஷ்ணவேணி கைதுசெய்யப்படவில்லை.
இதற்கிடையில், தானும் கவினும் உண்மையாகக் காதலித்ததாகவும், தன்னுடைய அப்பா அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் திடீரென வீடியோ வெளியிட்டார் அப்பெண்.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் இன்று (ஆகஸ்ட் 1) காலையில் ஒப்படைக்கப்பட்டது.
அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்ட கவினின் உடல், பிற்பகல் 12 மணியளவில் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கவின் உடலுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.