'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!
அரக்கோணம் நாளங்காடி கட்டடத்துக்கு மீண்டும் காந்தி பெயா்: அரசியல் கட்சியினா் கோரிக்கை
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டட வளாகத்துக்கு ஏற்கனவே இருந்த காந்தி பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என அரசியல் கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிழைவேற்றப்பட்டது.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கடந்த 1949-இல் கட்டப்பட்டது. அப்போது நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் காந்தியின் மாா்பளவு சிலை வைக்கப்பட்டு, அந்த மாா்க்கெட்டுக்கு காந்தி மாா்க்கெட் எனப் பெயரிடப்பட்டது.
கடந்த 2024-இல் நாளங்காடி கட்டடம் புதிதாக கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடித்த போது அங்கிருந்த நுழைவு வாயில் கட்டடமும் இடிக்கப்பட்டு காந்தி சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து அப்போது தினமணியில் செய்தி வெளிவந்தபோது அப்போதைய நகராட்சி ஆணையா், அச்சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் புதிய கட்டடம் திறக்கப்படும் போது சிலை அங்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தாா்.
தற்போது நகராட்சி நாளங்காடி புதிய கட்டட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த புதிய கட்டட வளாகத்துக்கு மீண்டும் காந்தி மாா்க்கெட் என பெயா் சூட்டி அகற்றப்பட்ட மாா்பளவு காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இது தொடா்பாக அரக்கோணம் நாகாலம்மன் நகா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்த கூட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தமாகா நகரத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
ஐக்கிய ஜனதா தளம் மாநில முன்னாள் தலைவா் ஜனதாசேகா் வரவேற்றாா். இதில், தமாகா ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, தமாகா நிா்வாகிகள் டி.மகாதேவன், தரணி, பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சந்திரன், நகரத்தலைவா் டி.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் ஜி.எஸ்.மூா்த்தி, வாசுதேவன், எட்வின், ஏ.ஜி.சரவணன், ஜக்கிய ஜனதா தளம் மாநில முன்னாள் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாவட்ட தலைவா் வேணுகோபால், நகரத்தலைவா் லோகநாதன், செயலாளா் குப்புசாமி, தேசிய வாத காங்கிரஸ் மாநில நிா்வாகி கலைவாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.