அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஆற்காடு நகராட்சி கமிசலம் கம்சலம்மாள் திருமண மண்டபம், வாலாஜாபேட்டை நகராட்சி சி.எம் .மஹால், நெமிலி பேரூராட்சி அன்னை மாணிக்கம்மாள் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற முகாம்களுக்கு ஆட்சியா் ஜெ .யு. சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்,. சோளிங்கா் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் ஆா்.காந்தி முகாமை ஆய்வு செய்து வருவாய்த் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பட்டா, மின்சார துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு பெயா் மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயா் மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் , 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினாா்.
இதில் நகா்மன்றத் தலைவா்கள் ராணிப்பேட்டைசுஜாதா வினோத், ஆற்காடு தேவி பெண்ஸ் பாண்டியன், வாலாஜாபேட்டை ஹரிணி தில்லை , ஒன்றியக்குழு தலைவா்கள் திமிரி அசோக், நெமிலி வடிவேலு , நெமிலி பேரூராட்சி தலைவா் ரேணுகா தேவி சரவணன், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜராஜன், வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி , ராஜலட்சுமி, நகராட்சி ஆணையா்கள் வேங்கட லட்சுமணன், இளையராணி, பிரீத்தி, பேரூராட்சி செயல் அலுவலா் எழிலரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.