செய்திகள் :

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

post image

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மீது அமலாக்கத் துறை ஆதரமற்ற வழக்குகளைப் பதிவு செய்வதாக, நீணடகாலமாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலேவுக்கு, அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுத் தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமலாக்கத் துறையினால் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எம்பி சாகேத் கோகலே, பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுபற்றி அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்ற வழக்குகளின் எண்ணிக்கைகள் குறித்து மோடி அரசிடம், நாடாளுமன்றத்தில் நேற்று நான் கேள்வி எழுப்பினேன்.

அதுகுறித்து வெளியான அதிர்ச்சியான தகவல்கள் இதோ:

கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை 5829 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால், அதில் வெறும் 1398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. அப்படியானால், 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் 77 சதவிகித வழக்குகள் உரிய ஆதாரங்கள் இல்லாததினால் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்லப்படவில்லை.

பதிவு செய்யப்பட்ட 5892 வழக்குகளில், வெறும் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால், 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில், வெறும் 0.13 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம்சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதியாகியுள்ளது.

எதிர்க்கட்சியினரை குறிவைக்க, மோடி அரசு அமலாக்கத் துறையை ஏவல் படையாகப் பயன்படுத்தி வருகின்றது. அமலாக்கத் துறையின் வழக்குகளைப் பொறுத்தவரை அவர்களது நடவடிக்கைகள்தான் தண்டனையே. அப்படியென்றால், நிரபராதிக்கும் பிணைக் கிடைக்க பல மாதங்கள் ஆகும்.

அமலாக்கத் துறை பதிவு செய்த 5892 வழக்குகளில், 77 சதவிகித வழக்குகளுக்கு ஆதாரங்களே கிடையாது. மேலும், நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்ற மீதமுள்ள வழக்குகளில் வெறும் 8 வழக்குகளில் (0.13 சதவிகிதம்) மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்த அமலாக்கத் துறை, 10 ஆண்டுகளில் வெறும் 0.13 சதவிகிதம் மட்டுமே வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.

அமலாக்கத் துறை என்பது மோடி மற்றும் அமித் ஷாவின், கிரிமினல் சிண்டிகேட் தவிர வேறில்லை. பாஜகவுக்காக மிரட்டி பணம் பறிப்பது, மோசடி மற்றும் சலவை இயந்திரங்களை இயக்குவது மட்டுமே அமலாக்கத் துறையின் ஒரே பணி” என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

Trinamool Congress Rajya Sabha member Saket Gokhale has accused the Enforcement Directorate of acting as an arm of the Prime Minister and the Home Minister.

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க