Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் திமுக அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்துள்ளார். பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை.
ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் வருகிற ஆக. 26 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன். முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.
பிரதமரை ஓபிஎஸ் சந்திக்கக் கூடாது என இபிஎஸ் எந்த அழுத்தமும் தரவில்லை" என்று கூறினார்.