செய்திகள் :

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

post image

நெல்லை மாவட்டம் சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களின் நிழல் படங்கள் வரைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிவகுமார் வினோதா தம்பதியினரின் மகன் ஹரிகிருஷ்ணா வயது 14. ஒன்பதாம் வகுப்பு புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியக்கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 7 ஆண்டுகளாக அவர் சிவராம் கலைக்கூடத்தில், ஓவியம் பயின்று வருகிறார், ஆசிரியர் மகாராஜன் பயிற்சி தந்து வருகிறார். ஆசிரியர் கணேசனும் வழிகாட்ட, ஓவியக் கலையில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து வந்தார்.

இப்போது, தனது முதல் சாதனையாக, ஹரிகிருஷ்ணா 101 விஞ்ஞானிகளின் நிழல் ஓவியங்களைக் கரிக்கோல் (charcoal pencil shading) மூலம் 28 இன்ச் உயரமும் 22 இன்ச் சார்ட் போர்டு அகலமும் எட்டு மாத காலமாக வரைந்து திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சிவராம் கலைக்கூடமும் இணைந்து ஓவியங்கள் ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெற்றது விஞ்ஞானி டாக்டர் ப்ரஃபுல்லா சந்திர ராய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விண்ணைத் தொட்ட விஞ்ஞானிகள் 101 என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த கண்காட்சியை மாவட்ட அறிவியல் அதிகாரி முத்துக்குமார் தலைமையில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அறிவியல் மைய கல்வியாளர் லெனின் முன்னாள் மாவட்ட நூலகர் முத்துகிருஷ்ணன் வெற்றிவேல் டுட்டோரியல் முருகவேல் ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன், திருவனந்தம், கிருபா, கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஹரி கிருஷ்ணா தங்கை கனிஷ்கா ஸ்ரீ 2020 கரோனா நேரத்தில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 சதுர அடி துணியைக் கொண்டு ஓவியமாக வரைந்து சாதனை படைத்தவர், மேலும் இவர்களின் பெற்றோர்களும் ஓவியம் வரைவது திறமை மிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Hari Krishna, a student of Shivaram Art School in Nellai district, is attempting to break the Guinness World Record by drawing the shadow portraits of 101 scholars.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க