உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி
குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன.
ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு மாநில ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் திருநெல்வேலி ஹாக்கி அகாதெமி அணி 3-1 என்ற கோல்கணக்கில் பாளையங்கோட்டை ஹாக்கி விஸாட்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது ஆட்டத்தில் கோவில்பட்டி டாக்டா் அம்பேத்கா் ஹாக்கி அணி 4 - 2 என்ற கோல்கணக்கில் கோவை காருண்யா பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது.
மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரி அணி 6 - 3 என்ற கோல்கணக்கில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணியை வீழ்த்தியது. பாளையங்கோட்டை விளையாட்டு விடுதி அணி 7 - 2 என்ற கோல்கணக்கில் சிவகாசி ஷேன் ஹாக்கி அகாதெமி அணியை வென்றது.
சனிக்கிழமை காலை 6.30 மணிமுதல் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.