மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
Jawan: "இது உங்களுக்கான என் முதல் காதல் கடிதம்; இனி நிறைய வரும்" - ஷாருக் கான் குறித்து அட்லீ
71-வது தேசிய விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருதை, அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக் கான் வென்றிருக்கிறார்.
இந்நிலையில் அட்லீ, ஷாருக் கானையும், படக்குழுவினரையும் வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார். அதில், "'ஜவான்' படத்திற்காக தேசிய விருதை நீங்கள் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது எமோஷனலாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.

என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்காக மிக்க நன்றி சார். இது உங்களுக்கான என் முதல் காதல் கடிதம்தான்... இனிமேலும் நிறையக் கடிதங்கள் வரும்.
இந்தப் படத்தை எடுக்க வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளருக்கும், என்னுடைய மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று. ஷாருக் சார் அருகில் இருப்பதே ஒரு பெரிய ஆசீர்வாதம்தான்.

ஒரு ரசிகனாக, உங்களுடன் பணியாற்றி, ஒரு படம் இயக்கி, அதுவும் ஒரு மாஸ் SRK திரைப்படமாக அளித்ததுதான் என் வாழ்வின் வரப்பிரசாதம். இதுவே எனக்குப் போதும் சார். நான் உங்களின் மிகச்சிறந்த ரசிகன். உங்களை நேசிக்கிறேன் சார்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...