காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்...
Aamir Khan: ``யூடியூப்பில் 'Sitaare Zameen Par' படத்தை வெளியிட காரணம் இதுதான்..'' - ஆமிர் கான்
2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் 'சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும், மூளை வளர்ச்சி சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்திருக்கிறார். கடந்த ஜூன் 20-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இப்படத்தை ஆமிர்கான் 'Youtube' -ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ஆமிர் கான், "முதலில் நல்ல கருத்தை பேசும் இந்தப் படத்தை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காகவே யூடியூப்பில் வெளியிடுகிறோம்.
ரூ.100 கட்டணம் செலுத்தி யூடியூப்பில் இப்படத்தை நீங்கள் காணலாம். குடும்பமாக 4-பேர் இப்படத்தைப் பார்த்தால் ஒரு ஆளுக்கு ரூ.25 ரூபாய்தான். அதற்குமேல் பலர் ஒரே நேரத்தில் இப்படத்தைப் பார்த்தால் இன்னும் மலிவான விலைதான்.

இப்போது இருக்கும் பிரபல ஓடிடி மாடல்கள் மீது விருப்பமில்லை. அதன் விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதை புரிந்துகொள்ளவில்லை. சினிமாவை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. இதன் மூலம் அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX