சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியு...
திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு
திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்.டெக்.கும் படித்துள்ள பாலக் ராம் நெகி இந்திய ரயில்வே பொறியியல் பிரிவில் அதிகாரியாக கடந்த 27.01.1998 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா்.
இவா் ரயில்வே வாரியத்தில் இணை இயக்குநராகவும், தில்லி மண்டலத்தின் முதுநிலை பொறியாளா் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும், புதுதில்லியில் இணைகத் தலைமை பொறியாளராகவும், ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் பொது மேலாளராகவும் (திட்டம் மற்றும் வணிக மேம்பாடு), இா்கான் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராகவும், திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான கேட்டிமான் விரைவு ரயிலின் (புதுதில்லி - ஆக்ரா) தண்டவாள மேம்பாட்டுத் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளாா்.
இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த எம்.எஸ். அன்பழகன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலக் ராம் நெகி தற்போது பொறுப்பேற்றுள்ளாா்.