சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியு...
புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு
புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் நிலங்களும், திருச்சி மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் 20,622 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து ஆகஸ்ட் 1 முதல் தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என திருச்சி மாவட்ட நீா்வளத் துறை தெரிவித்துள்ளது.