சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்திராபதி (38). சொந்தமாக வேன் வைத்து காய்கறி வியாபாரம் செய்யும் இவா், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிலிருந்து பைக்கில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டி அடுத்த பாப்பாபட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிா் திசையில் வந்த அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், உத்திராபதி உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பின் புதன்கிழமை மாலை உறவினா்களிடம் உடலை ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.