உளவுத்துறையில் 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்...
அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.
ஆனால், இன்று காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின்போதே இருவரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களுடன் பேசுகையில், அரசியலில் எனக்கென்று தனி சுயமரியாதை உண்டு. அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) நேரடி கண்காணிப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றியவன் நான். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தேர்தலில் ஒன்றுசேர்ந்த பாஜக - அதிமுகவுக்கு வாழ்த்துகள்; பிரதமர் மோடியுடன் கூட்டணிவைத்த எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்துகள். தமிழகத்துக்கு கல்வி நிதி தராத பாஜக அரசின் மீது வருத்தம்தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தவெகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி தொடர்பாக தவெகவும் பேசவில்லை, தானும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.