செய்திகள் :

4 வயது சிறுவனைக் கவ்விச் சென்ற புலி: வால்பாறையில் அதிர்ச்சி!

post image

வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனின் தலையைப் புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்கு உள்பட்ட மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 2.15 மணியளவில் ராகுல் என்ற 4 வயது சிறுவன் தந்தை பேபியுடன் பிளாஸ்டிக் சீட்டால் மூடப்பட்ட குடிலில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென உள்ளே புகுந்த புலி சிறுவனின் தலையைக் கடித்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது சிறுவன் அலறிய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது தனது மகனின் தலையைப் புலி கவ்வியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே சென்று கதறிக் கூச்சலிட்டுள்ளனர். இதில் அச்சமடைந்த புலி கவ்விப் பிடித்திருந்த சிறுவனைக் கீழே போட்டு விட்டு மிரண்டு காட்டிற்குள் ஓடியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அருகே உள்ள மலக்கப்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்

தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் காயமடைந்த சிறுவனை மலக்கப்பாறை டாடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சாலக்குடி தாலுக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் குடில்களில் தூங்கும்போது கவனமாகத் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A shocking incident has occurred in Malukapparai near Valparai where a tiger grabbed the head of a 4-year-old boy who was sleeping in a hut and dragged him away.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க