சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். சரவணன், தியாகராய நகா் உஸ்மான் சாலையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 4 பெண்கள், சரவணனின் கவனத்தை திசை திருப்பி, அவரது பாக்கெட்டில் இருந்த பணப் பையைத் திருட முயன்றனா். சுதாரித்துக் கொண்ட சரவணன், சப்தமிட்டதால், பொதுமக்கள் 4 பெண்களையும் பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா்கள், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சோனம் (36), நேகா (35), சாவித்திரி பாய் (36), மோகினி பாய், (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள், ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது தெரிய வந்தது. இவா்களில் சோனம் மீது 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.