ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
Vaiko: “கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” - மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த பின் பேசிய வைகோ
“2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று வைகோ பேசியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஆகஸ்ட் 1) சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " மு.க.முத்து மறைவு குறித்து துக்கம் விசாரித்தேன். அதோடு, முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் விசாரித்தேன்.

அவர் மருத்துவமனையிலும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருந்தார். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்.
காவல்துறை என்ன தான் உடனுக்குடன் கைது நடவடிக்கை எடுத்தாலும், ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன். 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.