செய்திகள் :

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

post image

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைதுசெய்யவேண்டும் என கவினின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

அதுவரையில், தங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறிவந்தனர். அதைத்தொடர்ந்து, சுர்ஜித் தந்தை சரவணன் கைதுசெய்யப்பட்டார்.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின்
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின்

இந்த நிலையில், கவினின் உடலை அவரின் தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 1) காலையில் பெற்றுக்கொண்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் அவர்களின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு கவின் உடல் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சிபிஐ விசாரணையில் எனக்கு உடன்பாடு இல்லை.

என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றால்தான் இதுபோன்ற விசாரணைகள் தேவை. என்ன நடந்திருக்கிறது, எதனால் நடந்திருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிந்தபிறகு நடவடிக்கைதான் தேவை.

நாம் எல்லோருமே வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய செயல்தான் இது. சாதிய உணர்ச்சியைத்தான் கொலைசெய்ய வேண்டும். சாதிக்காக மானுடனைக் கொலைசெய்வது உலகத்தில் எங்கு நடக்கும்?

சீமான்
சீமான்

உலகத்துக்கு அறிவியல், நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுத்த இனத்தில் இந்தத் தலைமுறையில் இவ்வாறு கொடுமை நடப்பதை எப்படி சகித்துக் கொள்வது.

மகனை இழந்த தாயின் கண்ணீருக்கு யாரிடம் பதில் இருக்கிறது?

தொடக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்தபோதே இதற்கு முற்று வைத்திருக்க வேண்டும்.

இளவரசன் திவ்யா, யுவராஜ் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சாதிய ஆணவத்துக்கு கவினின் கொலையே கடைசியாக இருக்க வேண்டும்.

அதற்கு தனிச் சட்டமும், கடும் நடவடிக்கைகளும் வேண்டும். இளம் தலைமுறையினரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சாதி, மதத்துக்குள் பெருமை வைக்கப்படுவதுதான் இங்கு பிரச்னை.

பள்ளி சிறுவனை சாதிய வன்மத்தோடு வெட்டுகிறான் என்றால் அந்த பிஞ்சு நெஞ்சில் சாதி வன்ம நஞ்சு எப்படி வந்தது?

சாதி குளம், கிணறு, சுடுகாடு என அமைப்பே தவறாக இருப்பதுதான் பிரச்னை.

கவின் குடும்பத்தினருடன் சீமான்
கவின் குடும்பத்தினருடன் சீமான்

செத்தாலும் தமிழனுக்கு சாதி போகாது என்றால் இந்தச் சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலியில்தான் இந்த மோதல் அதிகமாக நடக்கிறது.

இங்கு சாதி கொலை செய்தது, திருப்புவனத்தில் சட்டம் கொலைசெய்தது.

இரண்டு சாதி வாக்குகளும் வேண்டும் என்று அரசு துடிக்கிறது. இது நாடா சுடுகாடா என்றே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது?

சாதிய ஏற்றத் தாழ்வுகள் அற்ற, தீண்டாமை கொடுமை அற்ற சமதர்ம சமூகம் என்று கூறி தி.மு.க ஆட்சியதிகாரத்துக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னமும் சாதியால் கொலைகள் நடக்கிறது" என்று கூறினார்.

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க