ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்
உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் 'சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்' என்பார்கள். அதாவது, சூரிய ஒளி நம் மீது படவில்லையென்றால், பல நோய்கள் நமக்கு வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்பதே இதற்கு அர்த்தம். ஆனால், ஆரோக்கியத்துக்காக எவ்வளவும் செலவு செய்ய தயங்காத நாம், இலவசமாக கிடைக்கிற சூரிய ஒளியை பெரும்பாலும் பயன்படுத்திக்கொள்வதில்லை. இதற்கு பல குழப்பங்கள், கட்டுக்கதைகள் இருப்பதுவும் ஒரு காரணம்.
அவற்றையெல்லாம் இன்றைக்கு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, சித்த மருத்துவர் செல்வ சண்முகம் தீர்த்து வைக்க இருக்கிறார்கள்.

சூரிய ஒளியில் விட்டமின் டி இல்லை. சூரிய ஒளியில் இருக்கும் பி வகை புற ஊதாக்கதிர்கள், நமது தோலில் படும்போது தோலில் இருக்கும் கொலஸ்ட்ரால் வைட்டமின் டி-யின் முந்தைய நிலை வேதிப்பொருளாக உருமாறுகிறது. இதை 'கோலி கேல்சிஃபெரால்' என்று அழைக்கிறோம். பிறகு அங்கிருந்து ரத்த ஓட்டம் வழியாக கல்லீரலை அடைந்து 25 ஹைட்ராக்சி வைட்டமின் டி3 ஆகிறது. அடுத்து அங்கிருந்து சிறுநீரகங்களுக்குச் சென்று 1,25 ஹைட்ராக்சி வைட்டமின் டி3 ஆக உருமாறுகிறது. இந்த வைட்டமின் டி3 எலும்புகளின் வலிமையைக் கூட்ட உதவுகிறது.
எப்படி செடி, கொடிகள் அவற்றின் உடலில் இருக்கிற பச்சயத்தை வைத்து ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கான உணவை தயாரிக்கிறதோ, அதேபோல சூரியனில் இருக்கிற புற ஊதாக்கதிர்கள் நம் தோல் மீது பட்டவுடன் அங்கிருக்கும் கொலஸ்ட்ராலை வைத்து உடலானது வைட்டமின் டி-யை சமைக்கிறது.

வைட்டமின்களில் நீரில் கரையக்கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை என இருவகை இருக்கின்றன. இதில் வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது. உங்களுக்கு வைட்டமின் டி சரியாகக் கிடைக்க வேண்டுமென்றால் கொலஸ்ட்ரால் வேண்டும். அதாவது, உங்கள் தோலில் இருக்கும் டி ஹைட்ரோ கொலஸ்ட்ரால் ( நீரிழிக்கப்பட்ட கொலஸ்ட்ரால்) தான் வைட்டமின் டி3 ஆக உருமாற்றம் அடைகிறது.
அடுத்து, நீங்கள் முறையான கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டு வந்தால்தான் வைட்டமின் டி3 உணவு வழியாக சரியாக கிரகிக்கப்படும். ஆக, உங்கள் ஆயுளை நீட்டிக்கும் வைட்டமின் டி வேண்டுமென்றால், வெயிலில் நின்றால் மட்டும் போதாது. உங்கள் தோலில் கொலஸ்ட்ராலும் இருக்க வேண்டும்; உணவிலும் நல்ல கொழுப்பு இருக்க வேண்டும்.

சால்மன், மத்தி போன்ற மீன்கள்
சிகப்பிறைச்சி வகைகள்
முட்டையின் மஞ்சள் கரு
கால்நடைகளின் கல்லீரல்
காட் லிவர் ஆயில்
காளான், ஈஸ்ட், செறிவூட்டப்பட்ட பால் மற்றும் தானியங்கள் போன்ற சைவ உணவுகளில் சிறிதளவு வைட்டமின் டி2 உள்ளது.
பால், சீஸ், நெய் ஆகியவற்றில் விட்டமின் டி உள்ளது.
வைட்டமின் டி2, வைட்டமின் டி3 இரண்டுக்குமான பொதுவான பெயர்தான் வைட்டமின் டி. வைட்டமின் டி2 என்பது எர்கோகால்சிஃபெரால். இது தாவரங்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது. வைட்டமின் டி3 என்பது கோலிகேல்சிஃபெரால். இது சூரிய ஒளி மூலமும் விலங்குகள் மற்றும் மீன் வகைகளில் இருந்தும் கிடைக்கிறது. இதில் வைட்டமின் டி2-யை விட வைட்டமின் டி3 சிறந்தது.

பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நமக்கு நியாயப்படி வைட்டமின் டி குறைபாடு வரக்கூடாதுதான். ஆனால், அப்படி வருவதற்கு காரணம் சோலார் ஸெனித் ஆங்கிள் (Solar zenith angle) மற்றும் நம்முடைய கலாசாரம்தான். சோலார் ஸெனித் ஆங்கிள்படி, முற்பகல் 11 மணியில் இருந்து 2 மணி வரை சூரிய ஒளியில் வெறும் 15 நிமிடங்கள் நின்றாலே போதுமான வைட்டமின் டி கிடைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், நம்முடைய கலாசாரத்தில் ஆணும் சரி, பெண்ணும் சரி கிட்டத்தட்ட முழு உடலையும் மறைக்கிறபடியே உடை உடுத்துகிறோம். இதனால் இந்த நேரத்தில் சூரிய ஒளியில் நின்றாலும் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை.
எல்லா நேரத்திலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், அதற்கு நம்முடைய உடலில் 80 சதவிகிதமாவது சூரிய ஒளியில் பட வேண்டும்.

இருக்காது. உப்பளத்தில் உப்பு காய்ச்சும்போது சூரிய ஒளி படும். என்றாலும், உப்பால் வைட்டமின் டி உற்பத்தி செய்யாது. உப்பு, கடல் நீரின் ஆவியாதல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த செயல்முறை சூரிய ஒளியை உள்ளடக்கியது. ஆனால், சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் அதே வேதியியல் எதிர்வினைகளை உள்ளடக்குவதில்லை.
சராசரியாக ஒருநாளைக்குரிய வைட்டமின் டி அளவு 2000 IU (International Units) டோசேஜ் ஆகும். ரத்தத்தில் குறைந்தது 30 முதல், 60 நானோ கிராம்கள் இருக்க வேண்டும்.

எலும்புவலி, மூட்டுவலி, உடல்வலி மற்றும் தசைவலி இருப்பின், மருத்துவரை அணுகி, முறையான உணவு மற்றும் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி, மன ஆரோக்கியம், மூட்டு வலியின்மை, எலும்பு வலு, சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கும், நீரிழிவு வரக்கூடிய வாய்ப்பை குறைக்கும், உயர் ரத்த அழுத்ததைக் கட்டுப்படுத்தும்.

ஹைப்பர் வைட்டமினோசிஸ் டி என்பது அரிதான ஒன்று, எல்லோரையும் எளிதில் தாக்காது. இதற்கு காரணம், அதிகளவு வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வதாகும். அதிகப்படியான வைட்டமின் டி, ரத்தத்தில் அசாதாரணமாக அதிக அளவு கால்சியத்தை ஏற்படுத்தும். இது எலும்புகள், திசுக்கள் மற்றும் பிற உறுப்புகளை பாதிக்கலாம். இதற்கான அறிகுறிகள் உடல் சோர்வு, மயக்கம், மலச்சிக்கல் மற்றும் வலுவின்மை. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், எலும்பு வலுவிழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...