ரஷ்யாவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் முன்னேற்பாடுகளை தீவிரப்...
உதகை: அரசு மருத்துவமனையில் பேட்டரி சேவை அறிமுகம்!
உதகை அரசு மருத்துவக் கல்லூரியில், கல்லூரியின் நிதியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனம், நுழைவாயிலிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவை, நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.
இதற்கு முன் பழைய மருத்துவக் கல்லூரியின் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. தற்போது புதிதாகக் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு பேட்டரி வாகனங்கள் நிர்வாகத்தின் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு வாகனத்தைச் சேவை, இன்று கல்லூரியின் டீன் கீதாஞ்சலி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பேட்டரி வாகன சேவை தொடங்கிய முதல் நாளே ஒரு மணி நேரத்திற்குள் பத்து முறைக்கு மேல் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நுழைவாயிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.


அவசர பிரிவில் வருபவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. ஆனால் ஓ.பி பிளாக் செல்பவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி மலையின் மேல் இருப்பதால் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்த நிலையில், இந்த பேட்டரி வாகனங்களின் சேவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.