காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்...
ரஷ்யாவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் நாடுகள்
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் இன்று 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கம்சாட்கா பகுதியில் நான்கு மீட்டர் உயரம் வரை அலைகள் காணப்பட்டு வருகின்றன.
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் சுனாமியை துண்டலாம் என்று ஜப்பான் மற்றும் அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் என்ன கூறுகிறது?
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கூற்றுப்படி, அடுத்து மூன்று மணி நேரத்தில் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்படலாம்.
இதனால், ரஷ்யா மட்டுமல்ல... ஜப்பான், ஈக்வடார் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட ராட்சத அலைகள் காணப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் உயிரிழப்பா?
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து, ரஷ்யாவின் அந்தப் பிராந்திய சுகாதரத் துறை அமைச்சர் ஒலெக் மெல்னிகோவ், 'இந்த நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால், பெரிதாக பயப்படுவதற்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகள், கடற்கரை பகுதிகளில் இருக்கும் தங்களது மக்களை வேகவேகமாக வேறு பகுதிக்கு மாற்றி வருகின்றனர்.
மேலும், அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.