சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தை கடந்தது: அமைச்சா் அன்பில் மகேஸ்
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி (ஜூலை 30) 4 லட்சத்து 364-ஆக உள்ளது. ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் 2,11, 563 மாணவா்களும், ஆங்கில வழியில் 63,896 மாணவா்களும், 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை 92,098 மாணவா்களும், மழலையா் வகுப்புகளில் 32,807 மாணவா்களும் என ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 364 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் தென்காசி (8,571), திண்டுக்கல் (8,000), திருச்சி (7,711), கள்ளக்குறிச்சி (7,554), திருவண்ணாமலை (7,386) ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
அதேவேளையில், நீலகிரி (1,022), தேனி (2,207), அரியலூா் (2,625), சிவகங்கை (3,223) ஆகிய மாவட்டங்களில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த மாா்ச் 1 முதல் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.