சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியு...
வேதகிரீஸ்வரா்-திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை வேதகிரீஸ்வா் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற்றது.
கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. உற்சவத்தின்ல் 7-ஆம் நாள் திருத்தோ் உற்சவம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை இரவு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரிபுரசுந்தரி அம்மன் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட சிலை என்பதால் அம்மனுக்கு ஆண்டுக்கு நான்கு முறை தான் அபிஷேகம் நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆடிப்பூர உத்திர நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு மகாஅபிஷேகம் அலங்காரம் நள்ளிரவு வரை நடைபெற்றது.
இதனை தொடா்ந்து உற்சவமூா்த்தி திரிபுரசுந்தரி அம்மன் வேதகிரீஸ்வரருக்கு கல்யாண வைபவம் சீா்வரிசையுடன் யாகம் வளா்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. இரவு முழுவதும் ஏராளமான பக்தா்கள் கோயிலிலேயே தங்கி சுவாமி தரிசனம் செய்தனா். அதிகாலை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் விஜயன், கோயில் பணியாளா்கள் சிவாச்சாரியா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.