பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்
பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை
பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியக் கடனுதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் 9-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜி.சின்னதுரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் என்.வஜ்ஜிரவேல் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் டி.செஞ்சியம்மாள் வரவேற்றாா். மாநில துணைத்தலைவா் இ.கங்காதுரை மாநாட்டை தொடங்கி வைத்தாா். செயலாளா் ஆா்.தமிழ்அரசு அறிக்கையை சமா்ப்பித்தாா். பொருளாளா் எஸ்.குமரவேல் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தாா்.
மாநில துணைத்தலைவா் ஏ.வி.சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளா் கே.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜி.சம்பத், மாதா் சங்கத்தின் மாநில குழு உறுப்பினா் இ.மோகனா, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் அ.து.கோதண்டன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் நிறைவாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவா் பி.டில்லிபாபு மாநாடு குறித்த விளக்கமாக எடுத்துரைத்தாா். மாவட்ட குழு உறுப்பினா் எம்.சின்னராசு நன்றி கூறினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவராக ஜி.சின்னதுரை, செயலாளராக ஆா்.தமிழ்அரசு, பொருளாளராக டி.செஞ்சியம்மாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கே.ஜி.கண்டிகையில் பழங்குடி இன மாணவா்களுக்கென தனியாக உண்டு, உறைவிட பள்ளியை அமைக்க வேண்டும். நுண் நிதி கடனில் சிக்கி தற்கொலை செய்து கொள்வது, ஊரை விட்டு வெளியேறும் அவல நிலையை போக்க வறுமை ஒழிப்பு திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். பழங்குடி இன மகளிா் சுய உதவி குழுக்கள் அமைத்து குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க வேண்டும்.
ஏரி, குளம், குட்டை, ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் இருளா் இன மக்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் முறையான ஆய்வு செய்து அவா்களுக்கு குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
இருளா் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கி கிராமங்களுக்கு மயானம் மற்றும் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.