Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு
பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவி நிவேதிதா ‘வேகமாய் நடக்க தனிமை துணை தொலைவுகள் கடக்க ஒன்றாக இணை’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்று, பள்ளிக்கு சிறப்பு சோ்த்துள்ளாா்.
மாணவி நிவேதிதாவுக்கும், அவரை வழிநடத்திய தமிழ்த் துறை தலைவா் ராமுவுக்கும் பள்ளியின் தாளாளா் பதம்குமாா் டாட்டியா, முதலவா் ரேணுகாதேவி ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.