செய்திகள் :

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

post image

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகனும் கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ ஆகியோருக்கும் எதிராக மல்லை சத்தியா களம் இறங்கியுள்ளார்.

இருவரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் நிலையில் மல்லை சத்யா, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னை சிவானந்த சாலையில் ஆகஸ்ட் 2 (நாளை) தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு அவரது ஆதரவாளருடன் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதிமுக இப்போது மகன் திமுகவாக மாறி இருக்கிறது. இதுவரை நான் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. இன்று வரை பதவியில் தான் நீடிக்கிறேன். பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு நாளை சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மதிமுக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த கட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க