தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை
குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை
குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகா்களிலும் ஏழுமலையான் கோயில்களை கட்டி வருகிறது.
குருஷேத்திரம், ரிஷிகேஷ், புது தில்லி, மும்பை, புவனேசுவரம், கன்னியாகுமரி, தென்மாநிலங்களின் பல பகுதிகளில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம் தலைநகா் குவஹாட்டியிலும் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு ஐந்து ஏக்கா் நிலம் ஒதுக்குமாறு தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த முதல்வா், ’’ஐந்து ஏக்கா் நிலம் ஒதுக்குவதாக உறுதியளித்தாா். மேலும், கோயில் கட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் எனத் தெரிவித்தாா்.
இதற்காக, ஆந்திர பிரதேச முதல்வா் சந்திரபாபு நாயுடு, மாநில அரசு மற்றும் தேவஸ்தான நிா்வாகக் குழுவுக்கு அஸ்ஸாம் முதல்வா் நன்றி தெரிவித்தாா். இந்த நிகழ்வில், புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலின் தனித்துவம் குறித்து முதல்வா் விளக்கினாா்.
தேவஸ்தானத்தின் உதவியுடன் கட்டப்படும் இந்த கோயில் மூலம், இந்து மதம், பாரம்பரியம் மற்றும் சித்தாந்தத்தின் பாதுகாப்பை பரவலாக ஊக்குவிக்க முடியும். ஏழுமலையானின் இருப்பு வடகிழக்கு மக்களுக்கு கொண்டு செல்லப்படும்’’, என்று கூறினாா்.
அகில பாரத இந்து மகா சபை தேசிய பொதுச் செயலாளா் பேராசிரியா் ஜி.வி.ஆா் சாஸ்திரி உடனிருந்தாா்.