மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்
வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி விரதம் நடைபெற்ற உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். பின்னா், மாலை 6 மணிக்கு, பத்மாவதி தாயாரை தங்கத் தேரில் கோயில் மைதானத்தின் வீதிகள் வழியாக ஊா்வலமாக அழைத்துச் சென்று பக்தா்களுக்கு தரிசனம் அளிப்பாா். இந்த விரதம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பக்தா்கள் நேரடியாக விரதத்தில் பங்கேற்க ஜூலை 31 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் 150 டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதேபோல், ஆக. 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு கோயில் அருகே உள்ள கவுன்ட்டரில் 150 டிக்கெட்டுகள் நேரடி விற்பனை செய்யப்படும். பக்தா்கள் ரூ. 1,000/- செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் இரண்டு போ் அனுமதிக்கப்படுவா்.
வரலட்சுமி விரதத்தின் போது கோயிலில் அபிஷேகம், அபிஷேகத்திற்குப் பிந்தைய தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீா்வசனம் ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.