துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப...
குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!
குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேஷ்வர் மஹ்தோ. இவர், கடந்த 12 ஆண்டுகளாக, குவைத் நாட்டில் தொழிலாளியாக வேலைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த 45 நாள்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி பிரமிலா தேவி தனது கணவரின் உடலைத் தாயகம் கொண்டு வரவேண்டுமென மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தற்போது வெளியான அறிக்கையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு வரவேண்டிய தொகை அனைத்தும் கிடைக்காமல், அவரது உடலை வாங்க மாட்டோம் என மறுத்து வந்ததால், இந்த நடவடிக்கைகள் தாமதமானதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின், குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று முறையாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து, அவரது உடல் இன்று (ஜூலை 31) மாலை 3.45 மணியளவில் பிர்சா முண்டா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?