உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக நேற்று (ஜூலை 31) ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 1) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விலகியது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

"பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசினேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்திருக்கிறார்.
பன்னீர்செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா? அல்லது வேறு காரணமா? எனத் தெரியவில்லை.
பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்.
முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்தப் பிரச்னைக்காக இருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.