மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
திருமலையில் குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தரிசனம்!
திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு மற்றும் தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு ஆகியோா் பக்தா்களுடன் அன்ன பிரசாதம் உண்டனா்.
ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை திருமலைக்கு வந்த வெங்கய்ய நாயுடுவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனா்.
தரிசனம் செய்தபின், அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடுவுடன் இணைந்து அன்னதான மையத்தில் பக்தா்களுடன் இணைந்து இருவரும் உண்டனா்.
நிகழ்வில் அவா் பக்தா்களுடன் உரையாடினாா். அன்ன பிரசாதம் சுவையாகவும் சுத்தமாகவும் இருந்ததற்கு பக்தா்கள் அவரிடம் மகிழ்ச்சி தெரிவித்தனா். ஸ்ரீவாரி சேவாா்த்திகள் பக்தா்களுக்கு வழங்கும் சேவைகளையும் வெங்கய்ய நாயுடு பாராட்டினாா்.
இதில், தேவஸ்தான உறுப்பினா் பானுபிரகாஷ் ரெட்டி, கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.