வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு நிதியுதவி
செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.
கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி தொழிலாளி கணேசன் - ஜெயக்கொடி தம்பதியா். இவா்கள் கூலிக்கு வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி கொருக்கை ஏரிப்பகுதியில் மேய்யச்சலுக்கு வாத்துகளை விட்டிருந்தனா். மேய்ச்சலில் இருந்த வாத்துகளில் 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் மறுநாள் மா்மமான முறையில் உயிரிழந்தன.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, வாத்து மேய்க்கும் தொழிலாளி கணேசனுக்கு, அவரின் வாழ்வாதார பாதிக்காத வகையில் உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினாா்.