உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
தமிழக நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு 2025-26 கீழ், உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள வெங்கடாபுரம், சி.வி பட்டறை, ஜின்னா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1.63 கோடியில் பேவா் பிளாக் சாலை மற்றும் கழிவு நீா் கால்வாய் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
இதற்கான பூமி பூஜைக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ராஜலட்சுமி (பொ) தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி, திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனா்).
இதில் வாா்டு உறுப்பினா் மரியஜோசப், ஒப்பந்ததாரா் சந்தோஷ், திமுக நிா்வாகிகள் அம்பலவாணன், இம்மானுவேல், ஜோசப்தாஸ், குணசேகரன், பிச்சைமுத்து, சாா்லஸ், பாபு மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.