செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 16 சக்கரத்தேர், ஐந்து கருட சேவை, சயன சேவை உற்சவரான ஆண்டாள், ரங்க மன்னார், பெரியாழ்வார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.

சன்னதியில் சாத்தப்படும் சீர்வரிசை

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சீர்வரிசை பொருள்கள் கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர்வரிசை பொருள்கள் கொண்டு செல்வது வழக்கம்.

அதன் அடிப்படையில், ஆடி மாதம் நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கநாதர் வழங்கக்கூடிய எதிர் சீராக ஒவ்வொரு ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பழங்கள், மங்களப் பொருள்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சீர்வரிசை

அதன் அடிப்படையில், இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருள்களை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அணிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருவையாறு.. புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்... மேலும் பார்க்க

Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசார்யர் | ஆடி அமாவாசை

ஆடி மாத அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் முக்கியமான தினம். இந்த நாளில் பித்ருவழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் சிவஶ்ரீ சண்முகசிவாசார்யர். Aadi Amavasya | Importa... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் வளைகாப்பு வைபவம் திருவிழா! | Album

ஆடிப்பூரம்: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் வளைகாப்பு வைபவம் திருவிழா.! மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்ச... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டம்; தயாராகும் பெரிய தேர்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் அதிகாரிகள் நான்கு ரத வீதிகளில் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் 108 ... மேலும் பார்க்க

விரைவில் திருமணம் நடைபெற இதுவே எளிய பரிகாரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜைக்கான 6 காரணங்கள் என்னென்ன?

திருமண வரன் விரைவில் கிடைக்கவும் திருமண வாழ்வு சிறக்கவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் பாண்டிச்சேரியில் கல்யாண கங்கணப் பிராப்த பூஜை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு இனிய இல்லறத்தை அமைத்துக் கொள்ளு... மேலும் பார்க்க