என்ன சுகம்... இட்லி கடை முதல் பாடல்!
நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான, ‘என்ன சுகம்’ பாடலை வெளியிட்டுள்ளனர்.
காதல் பாடலான இந்தப் பாடலை தனுஷ் எழுதியதுடன் பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியும் உள்ளார்.