மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை
புரோட்டா கடை, இட்லி கடை... தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் நித்யா மெனன்!
நடிகை நித்யா மெனனின் தமிழ்ப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
நடிகை நித்யா மெனன் தமிழில் 180 படம் மூலம் அறிமுகமானவர். சில படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா - 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை படங்கள் வெற்றியை அடைகின்றனவோ இல்லையோ தன் கதாபாத்திரம் பேசப்படும் என்கிற அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார்.
இந்தாண்டு பொங்கல் வெளியீடாக காதலிக்க நேரமில்லை, கடந்த வெள்ளிக்கிழமை தலைவன் தலைவி, வருகிற அக். 2 ஆம் தேதி இட்லி கடை என 2025-ல் மூன்று தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, இரண்டு படங்களில் பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. இட்லி கடையில் எப்படியும் பேசப்படுவார் என்றே கணிகப்பட்டுள்ளது.

இதில், தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதியின் புரோட்டா கடையில் நித்யா மெனன் வேலை செய்யும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அடுத்ததாக, தனுஷுடன் இட்லி கடையில் வேலை செய்ய உள்ளார் என்பதால் இந்தக் கூட்டணி குறித்தும் ஆவல் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: நடிப்பிற்காக உடல் எடையைக் குறைக்கும் லோகேஷ் கனகராஜ்!
நித்யா மெனனின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கதைகளுக்குக் கூடுதல் பலமாக இருப்பதால், நீண்ட காலமாக தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகிகளின் பட்டியலில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.