மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டயில் 155 துப்பாக்கிகள், 1,652 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஏகே ரக துப்பாக்கிகள், இன்சாஸ், கார்பைன்ஸ், எஸ்எல்ஆர், கைத்துப்பாக்கிகள், நாட்டுத்துப்பாக்கிகள் உள்பட பலவித ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் மணிப்பூர் போலீஸ், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், ராணுவம் உள்பட பாதுகாப்புப்படையினர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது. மக்களும் அதிகாரிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.