செய்திகள் :

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

post image

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில், மூஸா ஃபெளஜியும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் டாச்சிகம் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று (ஜூலை 28) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

பயங்கரவாதிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் மகாதேவ் எனப் பெயரிடப்பட்டது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்வான் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஸ்ரீநகர் நகரில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் உள்ள டாச்சிகம் பகுதியில், தங்கள் தளங்களை மாற்றியிருக்கலாம் என உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கர்னல் சோஃபியாவை அவமதித்தது குறித்து ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? சு.வெங்கடேசன்

Operation Mahadev: Pahalgam terror attack mastermind Hashim Musa Fauji killed

நாட்டில் எத்தனை கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன?: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நாட்டில் எத்தனை கோயில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை கண்டறியுமாறு உத்தர பிரதேசத்தில் உள்ள பாங்கே பிகாரி கோயில் நிா்வாக குழுவிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் ப... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க