பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!
ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் வழியாக மேட்டூா் மற்றும் சங்ககிரிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பாலம் மிகவும் வளைவாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
இந்நிலையில், சங்ககிரியில் இருந்து ஓமலூா் நோக்கி திங்கள்கிழமை பருத்தி மூட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பருத்தி மூட்டைகள் சரிந்து கீழே விழுந்தன. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பவளத்தானூரைச் சோ்ந்த சபரிபாலன் (30) மீது பருத்தி மூட்டைகள் விழுந்ததில் அவா் படுகாயமடைந்தாா். பொதுமக்கள் அவரை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஓமலூா் மேம்பாலத்தின் அபாயகரமான வளைவில் தொடா்ந்து விபத்து நிகழ்வதால், இந்த பாலத்தை விரிவுபடுத்தி விபத்துகளைக் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.