நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது ...
முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு..
எல்லைப் பிரச்னை காரணமாக, கம்போடியா - தாய்லாந்து போர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
5 நாள்கள் நடந்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பிற நாடுகளின் குரல்
இந்தப் போர் தொடங்கியப்போதே, அது முற்றுப்பெற வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என்று முதலாவதாக மற்றும் முக்கியமாக குரல் கொடுத்தார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்.
அதன் பின், பல நாடுகள் அதை வலியுறுத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாட்டு தலைவர்களிடமும் போர் நிறுத்தம் குறித்து பேசினார். போர் நிறுத்தம் இல்லையென்றால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று பயமுறுத்தினார்.
இதனால், ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு ஒத்துகொள்ளாத தாய்லாந்து வழிக்கு வந்தது. இரு நாடுகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.
மலேசியாவில்...
இதையொட்டி, நேற்று மலேசியாவில் அமைதி பேச்சுவார்த்தை அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடந்தது.
இதில் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் சார்பில் அந்த நாட்டில் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், எந்த நிபந்தனையும் இல்லாமல், இரு நாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இரு நாடுகளிலும் போர் நிறுத்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது.