புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
”பாதரசத்தை தங்கமாக மாற்ற முடியும்” - அமெரிக்க நிறுவனத்தின் அதிசய கண்டுபிடிப்பு! எப்படி சாத்தியம்?
அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தங்கத்தை உற்பத்தி செய்வதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மாரத்தான் ஃப்யூஷன் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம், புதிய முறையில் பாதரசத்தை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது எதிர்காலத்தில் புதிய வருவாய் மூலத்தை உருவாக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அணு இணைவு உலை (nuclear fusion reactor) மூலம் நியூட்ரான் துகள்களின் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி, பாதரசத்தை மெர்குரி-197 ஆக மாற்ற முடியும் என்று மாரத்தான் ஃப்யூஷனின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

.
இந்த மெர்குரி-197, பின்னர் நிலையான தங்க வடிவமாக மாற்ற முடியும் என்று கூறுகின்றனர்..
ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீட்டின்படி, ஒரு ஜிகாவாட் வெப்ப ஆற்றல் கொண்ட அணு இணைவு உலை ஆண்டுக்கு 5,000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதில் ஒரு சிக்கல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாதரசத்தில் மற்ற வகைகள் இருப்பதால், தங்கம்-197 உடன் நிலையற்ற தங்க ஐசோடோப்புகளும் உருவாகலாம்.
இதனால் தங்கம் கதிரியக்கமாக ஆகலாம் என்று கூறுகின்றனர். இதைப் பற்றி மாரத்தான் ஃப்யூஷனின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆடம் ருட்கோவ்ஸ்கி, ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் கூறுகையில், தங்கத்தை கதிரியக்கம் இல்லாததாக மாற்ற 14 முதல் 18 ஆண்டுகள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.