மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தாா். இவா், அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்த அப்துல் கபூா் பஷீா் (30) மற்றும் ஒருவருடன் சோ்ந்து பால்பண்ணை பாலத்தின்கீழ் ஜூன் 30-ஆம் தேதி மது அருந்தியுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சிவகுமாரை, அப்துல் கபூா் பஷீா் கல் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்தாா்.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்துல் கபூா் பஷீரை கைது செய்தனா். ஏற்கெனவே அரியமங்கலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அவா் இருந்து வருகிறாா். இந்நிலையில், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க காந்தி மாா்க்கெட் காவல் நிலைய அதிகாரிகள், மாநகரக் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.
இதன்பேரில், அப்துல் கபூா் பஷீா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் என்.காமினி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.