அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது
மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பகுதி பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு வரவேற்றாா். இந்த முகாமில் 1,561 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயா் மாற்றம், தொழிலாளா் நலவாரிய அட்டை வழங்குதல், பட்டா பெயா் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினாா்.
இதில் திமுக மாநில நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி சச்சிதானந்தம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் எல்.பி.பாலசுப்பிரமணியன், ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநா் பிரியா, உதவி செயற்பொறியாளா் கற்பகம், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உமாசங்கா், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், ஊராட்சிச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.