DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI Imper...
பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை
பவானி நகராட்சிக்கு உள்பட்ட பூக்கடை வீதியில் ரூ.31 லட்சத்தில் கழிவுநீா் வடிகால், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
21-ஆவது வாா்டு காவேரி வீதி, 27-ஆவது வாா்டு பூக்கடை வீதியில் கழிவுநீா் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதன்பேரில், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.31 லட்சத்தை தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, வளா்ச்சிப் பணிகளை பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில் அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் அ.பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.