Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்
ஜூலை 31 - டாப் செய்திகள்!
* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம் என்றும் இன்று வீடியோ வெளியிட்டார்.
* அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடந்தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வேல்ராஜ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளான இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாக அம்மாநில பாஜக அரசு சட்டமன்றத்தில் தகவல்.
* முறையான பட்டப்படிப்பு இல்லையென்றாலும் பாரம்பர்ய குருகுலங்களில் படித்தவர்கள் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் அரசு உதவித்தொகையுடன் சேர்வதற்கு மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
* பாஜக கூட்டணியிலிருந்து இன்று விலகிய ஓ. பன்னீர்செல்வம் நிலையில், முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின்னர் கூட்டணி குறித்து "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்" என்று கூறினார்.
* சென்னையில் மின்சாரப் பேருந்துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டிருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.
* மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* முதல்வர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், குடும்ப நட்பு ரீதியாக ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்வோம் என்று தெரிவித்தார்.
* ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைக்க கூகுள் நிறுவனம் திட்டம்.
* சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இன்று திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர் காயமடைந்தனர்.
* இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இன்று தொடங்கிய கடைசி போட்டியில் இந்திய அணியில் பும்ரா, ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் காம்போஜ, பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கருண் நாயர், துருவ் ஜோரல், ஆகாஷ் தீப், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.